GOVT. Dental  College & Hospital
தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் உள்ள பல் பிரிவுகளும் அதனுடைய செயல்பாடுகளும்

தமிழ்நாடு பல் மருத்துவக்கல்லூரி, தமிழ்நாட்டில் உள்ள ஒரே அரசு கல்லூரி. இங்கு காலை 7.30 மணி முதல் நண்பகல் 12.00 மனி வரை புற நோயாளிகளுக்கு பல் சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் தரமான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. பின் மணி முதல் மாலை 5 மணி வரை அவசர சிகிச்சை பிரிவு செயல்பட்டு வருகிறது. இந்த பிரிவில் வரும் நோயாளிகளுக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் அவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று கொள்வதற்காக, காலை செயல்படும் புறநோயாளிகளின் பிரிவுக்கு சென்ற சிகிச்சை பெற வலியுறுத்தப்படுகிறார்கள்.

இக் கல்லூரியில் மற்றும் மருத்துவமனியில் நாள் ஒன்றுக்கு 1300 புற நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பல் சிகிச்சைக்கு என்று பல பல் மருத்துவ பிரிவுகள் உள்ளன். ஒவ்வொரு நோயாளியும் நல்ல பரிசோதனைக்கு உட்பட்ட பிறகு அந்த பிரிவின் கீழ் சிகிச்சை பெறுகின்றனர்.

இங்குள்ள சிறப்புப் பல் மருத்துவப் பிரிவுகள்,

1. வாய், நோய் அறிதல் மற்றும் மருத்துவப் பிரிவு
2. ஊடுகதியல் பிரிவு
3. முக அறுவை சிகிச்சைப்பிரிவு
4. பல் பாதுகாப்புப் பிரிவு
5. பல்கட்டும் பிரிவு
6. ஈறு நோய் சிகிச்சை பிரிவு
7. பல் சீரமைப்புப் பிறிவு
8. வாய், நோய் குறி அறிதல் பிரிவு
9. சமுதாயப் பல் பாதுகாப்பு
10. ஒருங்கிணைந்த ஆலோசனை மற்றும் பரிசோதனை மையம்.

வாய், நோய் அறிதல் மற்றும் மருத்துவப்பிரிவு

எந்த ஒரு நோயாளியும் பல் சிகிச்சைக்கு என்று தழிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரிக்கு வந்தவுடன் அவர்களை நன்றாகப் பரிசோதித்து, அந்த நபருக்கு எந்த விதமான பல்நோய், அது அந்த நபருக்கு வந்ததன் காரணம் என்ன? அதன் பக்கவிளைவுகள் என்ன? அவர்களுக்கு எந்த பிரிவின் கீழ் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்பது அனைத்தும் இங்கு கண்டறிப்படுகின்றது. அந்த நோயாளிகளுக்கு இரத்த பரிசோதனை மையத்தில் இரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனை செய்யப்படுகின்றது.

பல் மட்டும் அல்லாது பல்லை சுற்றியுள்ள ஈறு, நாக்கு, நாக்கிற்க்கு அடியில் மற்றும் மற்ற மென் திசுக்களும், அண்ணப் பகுதியும் நன்றாகா பரிசோதனை செய்யப்படுகின்றது. இந்த இடங்களில் ஏதாவது நோய் இருப்பின் அவற்றிற்க்கு ஏற்றவாறு சிகிச்சை அளிக்கப்படுகின்றது.

வாய்ப்புற்று நோய் என்பது இந்தியாவை பொறுத்தவரையில் மிகவும் அதிகமாக காணப்படுகின்றது. இது புகையிலை, பான் மசலாவை மெல்லுதல், பொடி வைத்தல், புகைப்பிடித்தல் போன்ற பழக்கங்களாலும், கூர்மையான பற்கலால் வாயிலுள்ள மென் திசு புண்படுவதாலும், இது போன்ற பல்வேறு காரணங்களாலும் வருகின்றது.

இநத வாய், நோய் மருத்துவப்பிரிவில் புற்று நோய் வருவதற்கான காரணங்கள் என்ன? அவற்றை எப்படி தடுப்பது? அவை வருவதற்கான அறிகுறி என்ன? என்பவைப் பற்றி அறிவுரைகளும் ஆலோசனைகளும் வழங்கப்படுகின்றது.

வாய் புற்றுநோய்க்கு முந்தைய நிலை- கண்டுபிடித்து அவர்களுக்கு புற்று நோய் வராமல் இருக்க உரிய சிகிச்சை அளிக்கப்படுகின்ற்து. புற்றுநோயுடன் வரும் நோயாளிகளை நன்கு பரிசோதித்து அந்த நோய் எந்த நிலையில் உள்ளது அவர்களுக்கு என்ன சிகிச்சை அளிக்கப்படவேண்டும் என்றும் தீர்மானிக்கப்படுகின்றது. வாயில் ஏற்படும் குழிப்புண்கள், லைகன் வெண்படலம், வாய் சளிச்சவ்வின் கீழ் உள்ள நார்திசுவினால் ஏற்படும் இறுக்கம் (Oral submucous Fibrosis) போன்ற நோய்களுக்கு தகுந்த முறையில் சிகிச்சை அளிக்கப்படுகின்றது.

ஊடுகதிரியல் பிரிவு :

வாய், நோய் அறிதல் மற்றும் மருத்துவப்பிரிவின் கீழ் ஊடுகதிரியல் பிரிவு உள்ளது. இங்கு பல்லில் ஏற்படும் நோய்கள், தாடையில் ஏற்படும் கட்டிகள், தாடை எலும்பு முறிவு, தாடையின் வளர்ச்சியை அறிவதற்கு என்று பல்வேறு காரணங்களுக்காக இங்கு ஊடுகதிர்ப்படங்கள் எடுக்கப்படுகின்றது.

சிகிச்சை அளிப்பதில் ஊடுகதிரியல் பிரிவு முக்கிய பங்கு வகின்றது.

முதலில் நோய் எத்தகையது என்று கண்டுபிடிக்க ஊடுகதிரியல் தேவைப்படுகின்றது. உதாரணமாக ஈறு நோயா? அல்லது பல்லில் நோயா? அல்லது வாய் சார்ந்த மற்ற பகுதியில் நோய் உள்ளதா? என்பதை எக்ஸ்ரேக்களின் மூலம் கண்டு பிடிக்கலாம்.

பல் நோய் கண்டறிய பயன்படுத்துமெக்ஸ்ரேக்கள் 0.8 நொடிகளில் எடுக்கப்படுகின்றன். அதனால் கதிர்வீச்சு என்ற பயம் தேவையில்லை. எக்ஸ்ரே கருவியில் உள்ள டயாப்ரம் எக்ஸ்ரேயின் வேகத்தைகுறைக்கின்றது.

எக்ஸ்ரேக்கள் எடுக்கும்போது காரியத்தகடுகள் பயன் படுத்துவதன் மூலம் உடம்பின் மற்ற பகுதிகளில் எக்ஸ்ரே கதிர்கள் படுவது தவிர்க்கப்படுகிறது.

ஈறு நோய்கள் ஏற்படும் போது பற்களில் எலும்புகள் அரிக்கப்படுகின்றன. இதனால் பல்லின் பிடிமானம் குறைந்து அசையத் துவங்குகின்றன. எக்ஸ்ரேயின் மூலம் ஆரம்பநிலையிலேயே இது போன்ற எலும்பின் பாதிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டு உடனடி சிகிச்சை தந்து மேற்படி பாதிப்பு ஏற்படுவதைத் தவிர்க்கப்படுகிறது. பல்லின் அடியில் தேங்கியுள்ள சீழ்கட்டிகள் மற்றும் சொத்தையின் தன்மை ஆகியவை தெளிவாக கண்டறியப்படுகிறது. பல வகையான எக்ஸ்ரேக்கள் இங்கு உள்ளன. நோயாளியின் தேவைக்கேற்ப எக்ஸ்ரேக்கள் எடுக்கப்படுகின்றன.

வாயினுள் ஊடுகதிர்ப் படங்களை வைத்து எடுக்கப்படும் ஊடுகதிர்படங்கள் அனைத்தும் எடுக்கப்படுகின்றது.

1. இன்ட்ரா ஒரல் பெரி அபைகல் (IOPA)
2. பைட் விங் (Bite Wing)
3. அகலாசல் (Occlusal)
© Copyright 2008 - Tamilnadu Dental College
Powered by DailyBread Host